‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

7 Min Read

அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று கேட்டு, அதற்குக் காது கொடுக்காமல் தன்னுடைய தொண்டைச் செய்கிறவன்தான் உண்மையானவன்!
‘‘நல்ல பெயர் எடுக்கிறவன் என்னிடம் வராதே! கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறவன் மட்டும் என்னிடம் வா!’’
முட்டாள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைவிட, அவர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதுதான் ரொம்ப நல்லது! அப்பொழுதுதான் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்று அதற்கு அர்த்தம்! – தந்தை பெரியார்

சென்னை, ஜூலை 16  ‘‘அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று கேட்டு, அதற்குக் காது கொடுக்காமல் தன்னுடைய தொண்டைச் செய்கிறவன்தான் உண்மையானவன்! ‘‘நல்ல பெயர் எடுக்கிறவன் என்னிடம் வராதே! கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறவன் மட்டும் என்னிடம் வா!’’ முட்டாள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைவிட, அவர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதுதான் ரொம்ப நல்லது! அப்பொழுதுதான் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்று அதற்கு அர்த்தம்’’  என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று கேட்டு, அதற்குக் காது கொடுக்காமல் தன்னுடைய தொண்டைச் செய்கிறவன்தான் உண்மையானவன்! ‘‘நல்ல பெயர் எடுக்கிறவன் என்னிடம் வராதே! கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறவன் மட்டும் என்னிடம் வா!’’ முட்டாள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைவிட, அவர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதுதான் ரொம்ப நல்லது! அப்பொழுதுதான் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்று அதற்கு அர்த்தம்! – தந்தை பெரியார்‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரைஅன்றைக்கு தேசத் துரோகக் குற்றம் என்கிற பெயர் இல்லை; ராஜ துரோகக் குற்றம்!ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் இடம் கொடுக்க வேண்டும் என்று, வெள்ளைக்கார அதிகாரிகளில், ஒரு சிலர் உணந்தார்கள்!இந்தியர்கள் என்ற பெயரில் யார் வந்தார்கள்?நீதிக் கட்சிதான் இரண்டாவது உலக யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன கட்சி!ஹிட்லரை வரவிடாதீர்கள்!‘விடுதலை’தான் அதற்குச் சரியானது!‘‘பெரியாருக்குப் பணத்தாசை; வெள்ளைக்காரன் கிட்ட கூட பணம் வாங்குகிறார்’’ என்றனர்!

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அன்றைக்கு தேசத் துரோகக் குற்றம் என்கிற பெயர் இல்லை; ராஜ துரோகக் குற்றம்!

அது என்னவென்றால்,  பிரிட்டிஷ் ஆட்சி ஏன் ஒழியவேண்டும்? என்று ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதியதால், ‘செடிஷன்’  எனப்படும் தேசத் துரோகக் குற்ற வழக்குப் பதிவானது. அன்றைக்கு தேசத் துரோகக் குற்றம் என்கிற பெயர் இல்லை; ராஜ துரோகக் குற்றம்.  ஏனென்றால், ராஜா ஆட்சி அன்றைக்கு நடைபெற்றது.

நாம் இன்றைக்கு மொழி வணக்கம் பாடுகிறோம் அல்லவா – அது மாதிரி அன்றைக்கு ராஜ வணக்கம், வாழ்த்து என்று இருந்தது. ‘லாங் லீவ் தி கிங்’ என்று  நாங்களே பள்ளிக்கூடத்தில் பாடி இருக்கிறோம். ‘அரசர் நீண்ட காலம் வாழ வேண்டும்’’ என்று பாடுவோம்.  ராஜ விசுவாச பாட்டுதான்; பெரிய மாநாடுகளிலேயும் – பள்ளிக்கூட வகுப்பிலும் முதலில் பாடுவார்கள்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் இடம் கொடுக்க வேண்டும் என்று, வெள்ளைக்கார அதிகாரிகளில், ஒரு சிலர் உணந்தார்கள்!

4, 5, 6 ஆவது படிக்கும் போதுகூட நாங்கள் அப்படித்தான் இருந்தி ருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருந்த நேரம் அந்த நேரத்தில் இரண்டாவது உலக யுத்தம் – கடைசி சொற்பொழிவை அதில்தான் நான் முடித்தேன்.  உங்கள்  எல்லோருக்கும் நினைவு இருக்கும். அந்த இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ்காரன் கொஞ்சம் மற்றவர்களைப் பார்த்தான். அம்பேத்கர் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலைமை களை மற்றவர்களும் கொஞ்சம் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்க ளுக்கு அனைத்து நிலை களிலும் இடம் கொடுக்க வேண்டும் நியாயமாக – அவர்களுடைய உரிமை கள் மறுக்கப்பட்டு இருக்கிறது என்று, அந்த வெள்ளைக்கார அதிகாரிகளில், ஒரு சிலர் உணந்தார்கள்;  இதற்கு மாறாக இருந்த அதிகாரிகளில் சிலர் பார்ப்பனர்கள் பக்கம் போனார்கள்.

இந்தியர்கள் என்ற பெயரில்
யார் வந்தார்கள்?

அதிலும், நியாயமான வெள்ளைக்கார அதிகாரி களைக்கூட பார்ப்பனர்கள் சரிப்படுத்திடுவார்கள். எப்படி சரிப்படுத்துவார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.    பார்ப்பனர்கள் இந்த ஆதரவு வாய்ப்புகளைப் பெற்ற உடனே, அடுத்த கட்டத்துக்குப் போனார்கள். இந்தியா இந்தியர்களுக்கே – பதவிகள் இந்தியர்களுக்கு – இந்தியர்கள் என்ற பெயரில் யார் வந்தார்கள்? எப்படி தேசிய மயம் என்பது பார்ப்பன மயமாகிவிட்டதோ, அதேபோல  அந்த அளவுக்கு பார்ப்பன மயத்தைக் கொண்டு வந்தார்கள். அப்படி கொண்டு வந்த உடனே, இனிமே நமக்கு இவன் – வெள்ளைக்காரன் பயன்பட மாட்டான். அப்பொழுது காங்கிரஸ் வருகிறது. காங்கிரஸ் இனிமே பயன்படாது. அப்படியென்றால், உடனே கம்யூனிஸ்டாக இருப்பார்கள், சோசியலிஸ்ட் கட்சிகளை உண்டாக்கிக் கொள்வார்கள். அதுவும் சரிப்படாது என்றால், நேராக பிஜேபி அல்லது இன்னொரு பெயரில் உள்ள புதிய கட்சி. இப்படி அவர்கள் யாருக்கு, அந்தந்த நேரத்தில், அவர்கள்  முழுமையாக அனுபவிக்க வேண்டும். அப்புறம் சுளையெல்லாவற்றையும்  சாப்பிட்ட உடனே, தோலைத் தூக்கிப் போடுகிற மாதிரி, அங்கே போட வேண்டும். இதுதான் அவருடைய சிந்தனையாக இருக்கும்.

நீதிக் கட்சிதான் இரண்டாவது உலக யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன கட்சி!

அந்த வகையில அய்யா அவர்களுடைய சிந்தனை எவ்வளவு கூர்மையானது என்பதற்கு அடையாளம், ‘யுத்தத்துக்குப் பணம் கொடுக்காதே’ என்று சென்ற முறை அப்படிச் சொன்னேன். இரண்டாவது யுத்தத்தில் பிரச்சாரம். அதே மாதிரி பட்டாளத்துக்கு ஆள் சேர்க்காதே – போகாதே – ஆள் சேர்க்கிறான். போகாதே இந்த இரண்டுக்கும் எதிராக அய்யா அவர்கள், நீதிக் கட்சிதான் இரண்டாவது உலக யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன கட்சி. அதற்குக் காரணம் இவருடைய தாக்கம். சைமன் கமிஷன் ஆனாலும் அவர்தான். அந்த வரலாற்றை பிறகு சொல்லலாம். இன்னொரு நாள் ‘தேசத் துரோகியா பெரியார்?’  என்ற  தலைப்பில் நிறைய பேச வேண்டிய விஷயங்கள் இருக்கிறது.

‘‘யாரை ஆதரித்தாலும், யாரை எதிர்த்தாலும் கொஞ்சம் இடம் வைத்துக்கொண்டு எதிர்க்கலாம். ஏனென்றால்,  நாளைக்கு அவரிடம் போக வேண்டியது இருக்கும்’’ என்று இன்றைக்கு நிறைய பேர் கணக்குப் போடுவார்கள். அந்தக் கணக்கே அய்யாவிடம் இருக்காது. துப்பாக்கியைப் பிடித்தார் என்றால்,  நடுங்கிக் கொண்டே துப்பாக்கியைப் பிடிக்க மாட்டார். நேராகத் துப்பாக்கியைப் பிடித்தார் என்றால், அதிலிருந்து புல்லட்  கடகடவென வரும். எப்பொழுது திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்புவார்.  அப்படிப்பட்ட ஒரு சிந்தனை – அவருடைய சிந்தனையில் இருந்து  தோட்டாக்களாக வெடிக்கக்கூடிய வாய்ப்பு வரும்.

அதற்கு நேர் எதிராக, வெள்ளைக்காரனை ஒழிப்பதற்கு இதுதான் சந்தர்ப்பம். ஆகவே, இரண்டாவது உலக யுத்தத்தில் வெகு மக்கள் பாமர மக்கள் எல்லாம், பட்டாளத்துக்குப் போகாதே, நம்மாட்கள் போகாதீர்கள், யுத்த நிதி கொடுக்காதீர்கள் என்றனர்.

ஹிட்லரை வரவிடாதீர்கள்!

பட்டாளத்துக்குப் போ! தாராளமாகப் போய்ச் சேருங்கள். ஹிட்லரை வரவிடாதீர்கள். ஜெர்மனியும், ஜப்பானும் தான் அச்சு நாடுகள் அப்போது. நம்முடைய நாடெலாம் நேச நாடுகள். பழைய காலத்து வரலாற்றில்,  அச்சு நாடுகள் என்றால்,  அவர்களைக் குறிக்கும். பிறகுதான், கடைசியாகத்தான் அமெரிக்கா தலையிடுகிறது.  மிக முக்கியமாகத் தொடர்பு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரும்போது அதற்கு என்ன செய்வது?  மக்கள் மத்தியில் புரியும்படியான ஒரு பத்திரிகை வேண்டும். மக்கள்  ஏற்கக்கூடிய அளவுக்கு, மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு பத்திரிகை வேண்டும். அது எதுவென்று வெள்ளைக்காரர்களுக்கு நோட்ஸ் போகிறது.

‘விடுதலை’தான் அதற்குச் சரியானது!

சாதாரண மக்கள் மத்தியிலே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு பத்திரிகை நமக்கு இருந்தால், வசதியாக இருக்கும். நாம் தனியாக, இன்னொரு பத்திரிகையை ஆரம்பிக்கக் கூடிய அதிகாரம் இருந்தாலும், புதிதாகக் கொண்டு வர முடியாது. அதற்கு என்ன வழி என்று பார்த்தார்கள். அப்படியென்றால், ‘விடுதலை’தான் அதற்குச் சரியானது!

‘விடுதலை’யை கேட்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சியினர்  தயாராகி, வருகிறார்கள். அப்படி வருகிற போது, அய்யா அவர்கள்,   ‘விடுதலை’யை ‘வார்ப் புரோபகண்டா’ பத்திரிகையாகக் கொடுப்ப தற்கு நான் தயாராக இருக்கிறேன். நான் முழு மையாகக் கொடுக்கிறேன். ஒரு ஆறு மாதம் குத்தகைக்குக் கொடுக்கிறேன், அதை நடத்திப் பாருங்கள்’’ என்கிறார்.

‘‘ஓ, சரி! ரொம்ப மகிழ்ச்சி’’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

‘‘பெரியாருக்குப் பணத்தாசை; வெள்ளைக்காரன் கிட்ட கூட பணம் வாங்குகிறார்’’ என்றனர்!

உடனே  நிறைய பேர்,  ‘‘பாத்தீங்களா, பெரியாருக்குப் பணத்தாசை; வெள்ளைக்காரன் கிட்ட கூட பணம் வாங்குகிறார்’’  என்றெல்லாம் சுலபமாகச் சொன்னார்கள்.

‘‘நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போ! எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை’’ என்று தொடர்ந்தார். அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று கேட்டு, அதற்குக் காது கொடுக்காமல் தன்னுடைய தொண்டை செய்கிறவன்தான் உண்மையானவன். அதனால்தான் அய்யாவினுடைய முதல் கண்டிஷனே, தோழர்களைப் பார்த்து, ‘‘நல்ல பெயர் எடுக்கிறவன் என்கிட்டே வராதே! கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறவன் மட்டும் என்கிட்ட வா! முட்டாள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதை விட, அவர்களிடம் கெட்ட பெயர் வாங்குவதுதான் ரொம்ப நல்லது. அப்பொழுதுதான் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்று அதற்கு அர்த்தம்’’ என்ற ஒரு விளக்கம் சொன்னார்.

ஹிட்லரை எதிர்க்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். இதனை விளக்கி ‘விடுதலை’ மலரில், ஒரு கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன்.  ஏனென்றால், பின்னாளில் வருகிறவர்கள் இதைத் தவறாகச் சொல்லக்கூடாது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *