‘யு.பி.அய்.’ மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம்

2 Min Read

மும்பை, ஜூலை 17 இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய அடுக்குமாடி அங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்) வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.அய். பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.அய். தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி க்கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த யு.பி.அய். கட்டண முறையைத் தங்களின் நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

புதிய கட்டணம்

தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.அய். செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட் டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?

இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது. இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப் பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் யு.பி.அய். பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரு கின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக் கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கி களின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *