டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!

சென்னை, ஜூலை 17- 26 காலிப் பணி யிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு தேதி மாற்றம்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு நடத்தப்படும் தேதிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மு.ப. நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *