அதிர்ச்சித் தகவல் கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் வெளியாகின! அணுஉலையின் பாதுகாப்புக்கு ஆபத்து?

பெங்களூரு, ஜூலை 16 தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங் குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விநி யோகம் தொடர்பான மிக முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப் பையும், பாதுகாப்பு குறித்த கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது.

அணுமின் நிலையம்

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இது, நெல்லை மாவட்டம் கூடங்குளத் தில் ரஷ்ய தொழில்நுட்ப வடிவ மைப்பில் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு 7 அணு உலைகள் இயங்கி வருகின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது யூனிட்களின் கட்டுமானப் பணிகளில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபட்டுள்ளது. இவர்களின் சர்வரில் இருந்து தகவல்கள் ஓரளவு திருடப்பட்டிருப்பதை ரிலையன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.”வேர்ல்ட் லீக்ஸ்” (World Leaks) என்ற ஹேக் கர் குழு, ரிலையன்ஸ் நிறுவனத்திட மிருந்து திருடப்பட்ட சுமார் 19 ஆயிரம் ஆவணங்களை டார்க் வெப்பில் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளது.

கசிந்துள்ள விவரங்கள்

அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் விநியோக விவரங்கள் காற்றோட்ட மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் வடிவமைப்பு கட்டுப்பாட்டு அறையின் தரைத்தள வடிவமைப்பு இந்த ஆவணங்கள் அனைத்தும் கடந்த 2016 முதல் 2025 மே மாதம் வரை சேமிக்கப்பட்டவை ஆகும். இவை அனைத்தும் 2027-ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 3 மற்றும் 4-ஆவது யூனிட்டுகளுக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.

அணு உலை பாதுகாப்புக்கு ஆபத்தா?

இந்தத் தரவுக் கசிவு குறித்து இந்திய அணுசக்தி மின் வாரியத் துடன் (NPCIL) இணைந்து ஒன்றிய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.இவ்விவகாரம் குறித்து அணுசக்தி நிபுணரான நிக்கோலஸ் ரோத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு உலைக்கு ஆபத்தா?

அவர் கூறுகையில்: “முக்கியத் தரவுகள் கசிந்திருப்பது அணு உலையின் பாதுகாப்பிற்கு கடுமை யான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். கசிந்த கோப்புகள், ஒரு எதிரிக்கு இந்தத் திட்டத்தை யார் அணுகுகிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அந்த அணுகல் எந்தெந்த கணினி அமைப்புகளைச் சென்றடைகிறது என்பதையும் தெளிவாகக் காட்டக்கூடும்.”

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு விவரங்கள் கசிந்திருப்பது தேசிய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *