புதுடில்லி, ஜூலை 16- டிஜிட்டல் அரெஸ்ட், இணைய வழியில் வங்கி மோசடி, ஹேக்கிங், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் நிதி மோசடிகள், வைரஸ் தாக்குதல் உட்பட பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான 6 மாத காலத்தில் நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 12.71 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் 2.86 லட்சம் புகார்கள் ஆன்லைன் வங்கி பணப்பரிமாற்ற மோசடி தொடர்பானவை.
ஒட்டுமொத்தமாக ரூ.10,178 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 63,116 சைபர் குற்றங்கள் மூலம் ரூ.897.79 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.
