எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை நாட முடியுமா? 24 மணி நேரமும் நீதி வழங்கக் கோரிக்கையை பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 16- அவசர வழக்குகள் மற்றும் கைது, காவல் துறை நடவடிக்கை போன்றவற்றுக்கு எந்த நேரத்திலும் நீதிமன்றங்களை நாடும் வசதி வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துள்ளது.

வழக்கின் பின்னணி

தற்போது நீதிமன்றங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. இரவு நேரத்தில் அவசரமாக ஆட்கொணர்வு மனு, பிணை மனு போன்றவற்றை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது.

மனுதாரரின் கோரிக்கை

“நீதி என்பது அலுவலக நேரத்தில் மட்டும் கிடைக்க கூடியதல்ல. அவசர காலங்களில் குடிமக்களின் அடிப்படை உரிமையை காக்க 24 மணி நேரமும் நீதிமன்றம் செயல்பட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற நிலைப்பாடு

இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க உத்தரவிட்டுள்ளது.

இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பணி நேரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் அமலானால், மருத்துவமனை போல “24×7 நீதிமன்றம்” என்ற புதிய முறை இந்தியாவில் தொடங்கும் என்பது பெரும் வரவேற்புக்குரிய ஒன்றாக இருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *