எப்படிப் பிச்சைக்கு உங்களிடம் வருபவன் தாயே, மகராசி, பசிக்காத வரம் தருகின்றேன்; கொஞ்சம் பழைய கஞ்சி இருந்தால் ஊற்றுங்கள் என்று கேட்கின்றானோ அது போலத்தான் நான் உங்களுக்கு அதைச் சாதிக்கின்றேன், இதைச் சாதிக்கின்றேன் என்று கூறி உங்கள் உள்ளம் குளிரும்படிப் புகழ்ந்து உங்களிடம் ஓட்டுப் பிச்சைக்கு வருவார்கள். இப்படிப் பிச்சைக்கு வருபவன் உங்களைப் புகழ்வதற்கும், ஓட்டுப் பிச்சைக்கு வரும் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கின்றதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
