சிதம்பரம் – பூந்தோட்டம் சா.ஜெயராமன் படத்திறப்பு நினைவேந்தல்

1 Min Read

சிதம்பரம், ஜூலை16– சிதம்பரம் மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சா.ஜெயராமன் (வயது 91) அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு 12.7.2026 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

தோழர் ஜெ.ராஜா வரவேற்றார்.  கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், ம.தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத் தேவன் ஆகியோர் படத் தினை திறந்து வைத்து, பூந் தோட்டம் கிராமத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வந்து கழகம் அமைத்தது பற்றியும் பூந்தோட்டம் கிராமம் சுயமரியாதை இயக்க கோட்டையாக இருந்தது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் கோவி பெரியார்தாசன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு சித்தார்த்தன், மதிமுக கழக மாவட்ட செயலாளர்கள் ஏ.என்.குணசேகரன், நா.ராம லிங்கம், எம்.பிச்சை, மதிமுக கழக ஒன்றியச் செயலாளர் இரா.தில்லை, பேராசிரியர் எம்.முருகன், கிளாவடி நத்தம் சாய் இளம்வழுதி, தேவன்குடி சாம்பமூர்த்தி, இராசேந்திரன், பரங்கிப் பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் இரா.கலையரசன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக புவன கிரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் இரங்கலுரை யாற்றினார்.  மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பஞ்சநாதன், மாவட்ட துணை செயலாளர் ப.முருகன், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், சிதம்பரம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் ச.வெற்றி வேந்தன் நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *