அன்னை நாகம்மையார் நினைவு நாள் – தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை

2 Min Read

சென்னை, மே 11 அன்னை நாகம்மையார் அவர்களின் 93ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும், கள்ளுக்கடை மறியலிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் முன்னின்று போராடியவர்.

தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, வைக்கம் போராட்டத்தை நடத்திய பெருமைக்குரியவர் அன்னை நாகம்மையார் ஆவார்.

இவ்வளவு பெருமைக்குரிய அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (11.5.2026) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க. சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதே போன்று அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊ. ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.சே. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற   மாநில துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், பேராசிரியர் ப. சுப்பிரமணி, சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பசும்பொன்   தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர்  முத்தைய்யன், செயலாளர்
கோ.நாத்திகன், சு.மோகன் ராஜ், இரா.குணசேகரன், நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மயிலை சேதுராமன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், சி.ஜான்சன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கருப்பைய்யா, கொடுங்கையூர் கோ. தங்கமணி தி.செ. கணேசன்,ப. கோபாலகிருஷ்ணன்,  பெரியார் மாணாக்கன், மு. செல்வி, கற்பகம் மற்றும் பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *