அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் வேலை ரத்து உறுதி : உச்சநீதிமன்றம் உத்தரவு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 15- கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணையை உறுதி செய்து உத்தரவிட்டனர்

மேல்முறையீட்டு மனு: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து பணியை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் உள்ளிட்டோர் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணைக்கு வந்தது.

விதிமுறைகள் மீறல்

அப்போது நீதிபதிகள், இளநிலை உதவி யாளர்கள் பணிக்கு 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஏற்று அதன் பின்னர் 54 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி, நீதிபதிகளாகிய எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் சுமார் 65 வழக்குகளை முழுமையாக ஆராய போதிய நேரம் கிடைக்காத நிலையில், 654 விண்ணப்பங்களை பெற்றுகொண்டு அதில் 440 விண்ணப்பங்களை ஒரே இரவில் எவ்வாறு பரிசீலனை செய்திருக்க முடியும்?

மேலும், விண்ணப்பங்கள் வரவேற்பதற்கு ஈ-பேப்பரில் மட்டுமே விளம்பரம் பிரசுரிக் கப்பட்டது ஏன்? 54 பேர் எந்த தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட் டார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் எங்கே என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 54 இளநிலை உதவி யாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறினர்.

வேலை ரத்து உறுதி

அப்போது மனுதாரர்கள் தரப்புக்கு ஆஜராகியிருந்த மூத்த வழக்குரைஞர் வி.வி.கிரி, தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ள மனுதாரர்கள் மாற்றுத் திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற் கப்படும்போது, தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால், மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், முறை கேடாக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் அமர்வு வழங்கிய ஆணையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *