ஜஸ்டிஸ் திரு.ஜனார்த்தனம் அவர்களின் மருமகன் மருத்துவர் ஆ.அருணகிரியின் தாயாரும், மருத்துவர் கோ.ஆத்மலிங்கம் அவர்களின் மனைவியுமான சுசீலா ஆத்மலிங்கம் நேற்று (14.7.2026) இரவு 11.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுற்ற அம்மையாரின் உடல் திருவண்ணாமலை சாலை, செஞ்சியில் உள்ள பிஆர்ஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டு பல்துறையினரும் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று (15.7.2026) மாலை 4 மணியளவில் இறுதி நிகழ்ச்சிகள் நடந்தேறின.
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மருத்துவர் ஆ.அருணகிரியிடம் அவரது தாயார் மறைவிற்கு கைப்பேசி மூலம் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
