ஜெயங்கொண்டம், ஜூலை 12- நேற்று (11.7.2026) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா முதல்வர் ஜான் பிரிட்டோவின் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. சிறப்பு விருந் தினராக நாராயணசாமி தலைமை ஆசிரியர் (ஓய்வு) கலந்துகொண்டு விழா வினைச் சிறப்பித்தார்
தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப் பற்றையும் வளர்ப்பதே ஆகும்
மேலும் இவ்விழா வரவேற்பு நடனத்துடன் இனிதே தொடங்கியது. மாணவர்கள் வேலுநாச் சியார், நேரு,சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி, அவ்வையார், பெரியார் போன்று பல்வேறு வேடங்களில் வருகை புரிந்து அனைவ ரையும் மகிழ்வித்தனர். அதுமட்டுமின்றி தமிழ்மொழியின் சிறப்பு களையும், குறிஞ்சிப் பாட்டில் வரும் 99 வகையான பூக்களின் பெயர்களையும், தமிழ்மொழி பற்றி பாடல் கவிதை மற்றும் திருக்குறள் ஒப்பிவித்தல் ஆகியவற்றை அழகாக அரங்கேற்றினர்.
மேலும், கோலாட்டம், அய்ந்திணை நடனம், மற்றும்பாரம்பரிய நடனம் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. சிறப்பு விருந்தினர் தன் உரையில் மாணவர்கள் அறிவோடு சிந்தித்து பகுத்தறிவோடு செயல்பட வேண்டும்என்பதை சிறு சிறு கதைகள் மூலம் விளக்கி அழகாக எடுத்துக் கூறினார்
பள்ளியின் முதல்வர் தன்னுடைய சிறப்புரையில் மாணவ மாணவிகள் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிக்கொணர வேண் டும் என அறிவுறுத்தினார்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
விழாவின் நிறைவாக மாணவி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் கிரிஜா, இளங்கோவன், கவிதா, எஸ்தர், சுந்தரா தேவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
