விருத்தாசலம், ஜூலை 11– ப.க. மாநில அமைப்பாளர் இரா.பெரியார்செல்வனின் தந்தையார் இராமனின் கண்கள் மற்றும் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.
மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வனின் தந்தையார் சோ.ராமன் 29.6.2026 அன்று பகல் 1:30 மணி அளவில் புதுக் கூரைப்பேட்டையில் மறைவுற்றார். அவரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கும், அவரின் உடல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடையாக அளிக்கப்பட்டன.
நிறைவாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில், விருத்தாசலம் மாவட்ட காப்பாளர்கள் அ. இளங்கோவன், அரங்க.பன்னீர்செல்வம், தலைவர் த.சீ.இளந்திரையன், செயலாளர் ப. வெற்றிச்செல்வன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, செயலாளர் க.எழிலேந்தி, சொற்பொழிவாளர் புலவர் இராவணன், பொறுப் பாளர்கள் மணிவேல், பஞ்சமூர்த்தி, குணசேகரன், கண்ணன், தங்க.இராசமாணிக்கம், தென்னவன், முருகன், பாலமுருகன் உள்பட தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாநில ப.க அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம் நன்றி கூறினார்.
