இனி பெட்ரோல், டீசல் வேண்டாம் வருங்காலத்துக்கான எரிபொருள் ‘ஹைட்ரஜன்’ ஆகதான் இருக்கும் ஒன்றிய அமைச்சர் கட்கரி சொல்கிறார்

காந்திநகர், ஜூலை 11- “போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜனில்தான் உள்ளது” என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்த பிரவாஸ் 5.0 மற்றும் பாரத் பிரவாஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, “போக்குவரத்து துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் தான் என்பதிலும், அதுவே வருங்காலத் துக்கான எரிபொருள் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

எனவே அதற்கான பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 10 வழித் தடங்களில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது தொடர்பான சோதனைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகிய துறைகளில் தொழில்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா தனது தொழில்நுட்பம் மற்றும் செலவு திறன் ஆகியவை மூலம் உலகளவில் முன்னிலை வகிக்கும்.

பேருந்துகள் தயாரிப் பில் வாகன துறை எடுத் துள்ள முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. போக்கு வரத்து நிறுவனங்களும், உற்பத்தி யாளர்களும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும். நியாயமான விலையில், கூடுதல் வசதிகளை வழங்குவதே உற்பத்தியாளர்களின் பொறுப்பு.

பாதுகாப்பான போக்குவரத்து என்பது மற்றொரு முக்கியமான விசயமாக உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகளும், அதில 1.80 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் 66 சதவீதம் பேர் 18 முதல் 36 வயதுக் குள்பட்டவர்கள். அதிகரிக்கும் விபத்துகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத இழப்பு ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுப்பதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். சாலை பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை தருகிறது என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *