லக்னோ, ஜூலை 10- ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் கடந்த 5.7.2026 அன்று அம்மாநில வக்ஃபு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார்.
வக்ஃபு (திருத்த) சட்டம், 2025-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நாட்டின் முதலா வது மாநில அளவிலான வக்ஃபு வாரியம் ஆகும்.
இது குறித்து உத்தரப்பிரதேச சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ‘‘வக்ஃபு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தான் ம.பி. வக்ஃபு வாரியத்தில் 2 இந்துக்கள் சேர்க்கப்பட்டனர். வக்ஃபு சொத்துகளை சிறப்பாக பராமரிக்கவே இந்த சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது” என்றார்.
