சிறீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் போராட்டம்

சிறீவில்லிபுத்தூர் ஜூலை 10- சிறீவில்லிபுத்தூரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு அரசு பொங்கல் விழா விற்குவழங்கும் சேலை, பள்ளி மாணவர்களின் சீருடைக்கான காடா துணி நெசவு செய்யப் பட்டு வருகிறது. இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின் றனர்.

கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு நூல் வழங்கவில்லை. இந்த தறிகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான ரகங்கள் தவிர வேறுசேலை மற்றும் துணிகள் நெசவு செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் 2 மாதங் களாக வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக் காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள. புதிய ரக சேலைக்கு ஏற்ப தறிகளில் மாற்றம் செய்ய ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், தறிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஆகும்.

எனவே, புதிய ரக சேலைக்கு நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், சிறீவில்லி புத்தூர் மாயாண்டிபட்டி தெரு விநாயகர் கோயில் முன் 6 நெச வாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கங் களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து நேற்று (9.7.2026) காலை போராட்டத்தில் ஈடு பட்டனர். அதைத் தொடர்ந்து கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெங்க டேசலு, டிஎஸ்பி பால சுந்தரம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய ரகத்தை ரத்து செய்து விட்டு, பழைய ரக சேலை உற்பத்திக்கு உடனடியாக நூல் வழங்க வேண்டும். 2 மாத கால வேலை இழப்புக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை நெசவாளர்கள் அளித்தனர்.

வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், முன்பண மாக தறிக்கு ரூ.1,000 வழங்குவதாகவும், ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் உறுதி அளித்தார். இதையடுத்து நெசவாளர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக சிறீவில்லி புத்தூர் நகர தவெக செயலாளர் ராஜ பாண்டி நெசவாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ‘இது நெச வாளர்கள் நடத்தும் போராட்டம். எனவே, அரசியல் கட்சியினர் பங்கேற்க வேண்டாம்’ என நெசவாளர்கள் தெரி வித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *