கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.7.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகுவதாக சொல்லப்படும் பனி சிவலிங்கம், இந்த ஆண்டு பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே பாதி அளவிற்கு சுருங்கியுள்ளது. இது எந்த அதிசய நிகழ்வும் அல்ல; காலநிலை மாற்றம் மற்றும் அதிக வெப்பநிலையால் ஏற்பட்ட இயற்கை நிகழ்வே என்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத் பள்ளி கல்வியில் பின்னடைவு: பள்ளிப் படிப்பை நிறைவு செய்தல், கல்லூரியில் சேருதல் மற்றும் வகுப்பறை கற்றல் முடிவுகள் ஆகியவற்றில் குஜராத் பின்தங்கியுள்ளதாக நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வறிக்கையின்படி, 2024-2025ஆம் ஆண்டில் குஜராத்தின் மேல்நிலைக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 47.3% ஆக உள்ளது; இது 58.4% என்ற தேசிய சராசரியை விட குறைவாகும்.

தி இந்து:

* அயோத்தி ராமன் கோயில் நிர்வாகத்தை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) ஆகிய அமைப்புகள் கோயில் நிர்வாகத்தை “அங்கீகரிக்கப்படாத வகையில்’ கைப்பற்றியுள்ளன’ என ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

* ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முறை குறித்த பார்வை: இந்தியாவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து ஜாதி வாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் ‘முன்-சோதனை’ (PRE-TEST) மற்றும் கேள்வித்தாள் வடிவமைப்பு ஆகியவற்றையும், 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட முரண்பாடுகளையும் உற்று நோக்குவது முக்கியமானது.

* ஒன்றிய அமைச்சர் பூபேந்தரின் உதவியாளர்கள் அதிரடி நீக்கம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தரின் முக்கிய உதவியாளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை, அரசியல் நிதி தொடர்பான தனது நீண்டகால குற்றச்சாட்டுகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்புபடுத்திப் பேசியது. “பிரதான் மந்திரி சந்தா தோ தண்டா லோ” (நன்கொடை அளித்து தொழில் பெறுதல்) என்ற திட்டம் “தவறான பாதையில் சென்று விட்டதா” என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியது.

தி டெலிகிராப்:

* ராமன் கோயில் டிரஸ்ட் ஒரு தனியார் அறக் கட்டளை? “இது ஒரு தனியார் அறக்கட்டளை. பொதுமக்களின் நன்கொடைகளை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தனியார் அறக் கட்டளையை பற்றி நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? இது ஏன் தனியார் அறக்கட்டளையாக இருக்கிறது? இது பிரதமரால் அறிவிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கை செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்ட ஒன்றாகும்,” என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *