பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

2 Min Read

சென்னை, ஜூலை 7- தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை வாயிலாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உறுதிமொழி 23.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் ”போதைப்பொருள் தடுப்பு” உறுதிமொழி ஏற்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி 25.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இப்பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி, வல்லம் பேரூந்து நிலையம் சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியை இக்கல்லூரியின் முதல்வர்  க.ப.வெள்ளியங்கிரி  கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.  இதில் வல்லம் காவல் நிலைய ஆய்வாளர்  செந்தில் குமார், கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் வல்லம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்களும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் போதை தடுப்பு பற்றிய விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பிடித்து முழக்கங்கள் எழுப்பி பொதுமக்களிடம் விழிப் புணர்வையை ஏற்படுத்தினர். மேலும் வல்லம் பேருந்து நிலையத்தில் நின்று பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் போதையில்லா சமு தாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என உறுதிமொழியும் எற்றனர்.

திராவிடர் கழகம்

இதனை தொடர்ந்து அன்று காலை 11:30 மணியளவில் ”போதைப்பொருள் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளருமாகிய பெ.மாதவன் வரவேற்றார்.

இக்கல்லூரியின் முதல்வர்  க.ப.வெள்ளியங்கிரி  கலந்து கொண்டு தலைமையுரையாற்றியுள்ளார். இக்கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய வல்லம் காவல் நிலைய ஆய்வாளர், மாணவர்களிடம் இன்றைய இளம் தலைமுறை சமுதாயத்தில் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றியும் எளிமையாக எடுத்துரைத்தார்.

மேலும் இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர். க.ரோஜா   தனது உரையில் போதைப் பொருள்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பைப் பற்றி எடுத்துரைத்தார்.    இந்நிகழ் வின் இறுதியில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் ஞா.செங்கொடி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை ஒருங்கிணைப்பாளருமான  ரெ.நடராஜன் தொகுத்து வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *