சென்னை, ஜூலை 7– தமிழ்நாடு தொழில்த்துறை அமைச்சர் சிவகாசியில் பள்ளி ஆய்வின் போது ஆங்கிலத்தில் பேச சொல்லி மாணவியிடம் தாழ்வு மனப்பான்மை தூண்டும் விதமாக நடந்து கொண்ட காணொலிக் காட்சி வெளிவந்தது.
அதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் அமைச்சர் ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது.
இது மிகவும் உணர்ச்சி யற்றது. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ் நிலைகளில் படக்கருவி களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
காணொலி மோகம்
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். காணொலி மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
