மானமிகு ஆசிரியர் பெருந்தகை அவர்களே!
திராவிடர் கழகத்தின் போர்ப்படை வீரர்களே, வீராங்கனைகளே!
தளபதிகளே! பொறுப்பாளர்களே!
தந்தை பெரியார் அவர்கள்,
சுயமரியாதை இயக்கத்தை உயிர்நாடியாகவும் –
பகுத்தறிவுக் கொள்கையை உயிர்மூச்சாகவும் கொண்டு –
திராவிடர் கழகத்தை உருவாக்கி –
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை உயர்த்தி வைக்க –
அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
தந்தை பெரியாருக்குப் பிறகு –
திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை –
கட்டிக் காத்து – கட்டுக்கோப்பாக வைத்து –
அதை ஒரு “பேரியக்கமாக ” இயக்கி வருகிறார் மாண்புமிகு ஆசிரியர் பெருந்தகை!
திராவிடர் கழகம் என்பது,
சட்ட ஆலோசகர்கள், பொருளாதார வல்லுனர்கள்,
பொறியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள்,
முனைவர் என பல கலைகளையும் கற்ற பன்முகத் தன்மை கொண்டவர்களை
உள்ளடக்கி, ஒருங்கே அமையப்பெற்ற ஒரு “பல்கலைக் கழகம்”
ஆம். “திராவிடர் கழகம்” என்ற “பேரியக்கம்” ஒரு “பல்கலைக் கழகம்”.
இளமைக் காலங்களில் நீங்கள் ஓர் “ஆசிரியர்”.
தற்போது, திராவிடர் கழகம் எனும் “பல்கலைக் கழகத்தின்” “பேராசிரியர்”.
திராவிடர் கழகம், ஆழ்போல் தழைத்து – அருகுபோல் வேரூன்றி,
தமிழ்நாட்டில் ஒரு தனி முத்திரையை பதித்திருக்கிறது.
தற்போது, தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகின்ற சமுதாயமே இல்லை என்ற
நிலையை உருவாக்கியது திராவிடர் கழகம்.
இனி யாரேனும், தமிழ்ச் சமுதாயத்தை ஒடுக்க நினைத்தால்,
அவர்கள் வேரோடும், மண்ணோடும் களை எடுக்கப்படுவார்கள்.
திராவிடர் கழகம் எனும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பெருந்தகை அவர்களே!
அமெரிக்காவில், யதார்த்தமாக பேசுகிற ஒரு பழக்கமுறை:
“வயது என்பது ஓர் எண்ணிக்கை மட்டுமே”!
Age is just a number like 70, 80, 90 etc. – It has no meaning…
அது காலத்தின் கணிப்பு அல்ல!
நீங்கள் என்றென்றும் – நலமுடனும், வளமுடனும் – மகிழ்வுடனும், மனநிறைவுடனும்
திராவிடர் கழகம் எனும் பேரியக்கத்தைத் தொடர்ந்து வழிநடத்திட –
நூற்றாண்டையும் கடந்து – பல்லாண்டு, பல்லாண்டு –
நீடூழி வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுமென விரும்பி –
எல்லாம்வல்ல இயற்கையை வணங்கி – உங்களை வாழ்த்தி –
உங்களின் சீரிய பணியைப் பாராட்டி –
திராவிடர் கழகம் எனும் பேரியக்கம் – இந்த நிலம், நீர், நெருப்பு,
கடல், காற்று, வானம் எனும் எல்லா இயற்கைச் சக்திகளும் உள்ளவரை,
நீடித்து நிலைத்து நின்று – வாழையடி வாழையாக வளர்ந்து வரும்
என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தி—
நான் பிறந்து வளர்ந்த மண்ணான, ஒருங்கிணைந்த சேலம்
மாவட்டத் தலைநகரில், நடைபெறும் திராவிடர் கழகச்
செயல்வீரர்கள் மாநாடு சிறப்பாக நடந்தேற,
எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டாக்டர் தேவராசன்
அமெரிக்கா (4.7.2026)
சேலம் வாழப்பாடிக் கிராமத்தில் முதுபெரும் சுயமரியாதை வீரர் (மறைந்த) குமார் அவர்களது மருமகள் அமிர்தம் சுகுமார் அவர்களின் சகோதரர் (தற்போது ஃபுேளாரிடா மாநிலத்தில் வாழ்கிறார்) பொதுக் குழுவில் வாழ்த்துரை.
