l பா.ஜ.க. எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல!
– ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
>> பா.ஜ.க. கூறும் சமூகம் என்றால் முஸ்லீம், கிறித்தவர்களான சிறுபான்மை மக்கள் அடங்க மாட்டார்கள் – அப்படித்தானே!
– – – – –
l அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம். அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலகல் ஏற்பு.
>> பதவி விலகலை ஏற்பது கூட ஒரு செய்தியா? ‘காணிக்கை பணத்தை உண்டியலில் போடாதீர்கள், அர்ச்சகரின் அர்ச்சனை தட்டில் போடுங்கள்’ என்று சொன்னவர் தான் ஒன்றிய பிஜேபி அரசின் நிதி அமைச்சர் ஞாபகம் இருக்கட்டும்.
