திருச்சி, ஜூலை6- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறனையும், மொழி ஆளுமையையும் வளர்க்கும் நோக்கில் ‘வாசிப்பு மன்றச் செயல் பாடுகள்’ 01.07.2026 அன்று காலை 10.00 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றன.
கல்வியாண்டின் முதல் மன்றச் செயல்பாடான இந்த நிகழ்வைப் பள்ளி யின் முதல்வர் முனைவர் க வனிதா தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.
நவீன கற்றல் முறை களை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்துவ மான பயிற்சிகள் முன்னெ டுக்கப்பட்டன:
எழுத்துகளின் சங்கமம் (6-ஆம் வகுப்பு): மொழி அறிவின் அடிப்படைத் தூண்களாகத் திகழும் எழுத்துகளை ஆழமாகப் பதியும் வண்ணம், வழங்கப் பட்ட எழுத்துகளைக் கூர்ந்து கவனித்து இனம் கண்டு, வட்டத்தில் நின்று உச்சரிக்கும் பயிற்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங் கேற்றனர். எழுத்துகளின் வடிவமும் ஒலியும் மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிய இப் பயிற்சி வழிவகுத்தது.
கதை சொல்லும் கலை (7-ஆம் வகுப்பு): இளங்கலை தமிழாசிரியர் கனிமொழியின் வழிகாட்டு தலில், கதை சொல்லும் கலை ஒரு நிகழ்த்து கலையாக மாற்றப்பட்டது. மாணவர்கள் வெறும் கதைகளை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அக்கதைகளின் கதாபாத்தி ரங்களோடு ஒன்றிணைந்து, உணர்ச்சிகரமான நடிப்பால் பார்வையாளர் களைக் கவர்ந்தனர். இது மாணவர்களின் தன்னம்பிக்கையையும், கற்பனைத் திறனையும் ஒருசேர வளர்த்தது.
குறள் வழி நன்னெறி (8-ஆம் வகுப்பு): அறத்தின் ஆணிவேரான திருக்குறளைக் கற்றலில் ஒரு புதிய பரிமாணம் புகுத்தப்பட்டது. இளங் கலை தமிழாசிரியர் வெர் ஜினின் மேற்பார்வையில், ‘கல்வி’ மற்றும் ‘கல்லாமை’ அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்களை மாணவர்கள் ஓங்கி ஒலித்து ஒப்புவித்தனர். கற்ற குறள்களின் பொருளை உணர்த்தும் வகையில் அமைந்த ‘கோடிட்ட இடத்தை நிரப்புதல்’ பயிற்சி, மாணவர்களின் மனப்பாடத் திறனையும் புரிதலையும் சோதிக்கும் வகையில் அமைந்தது.
சிறப்பு
ஒருங்கிணைப்பு
இத்தகு ஆக்கபூர்வமான நிகழ்வுகளைத் திட்டமிட்டு, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வாசிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும் பள்ளியின் முதுகலை தமிழாசிரியருமான ஏ.ஆர்.திலகவதி சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத் தினார்.
இத்தகைய முன்னெ டுப்புகள் மாணவர்களை வெறும் புத்தக வாசிப்பிற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், சிந்தனை சார்ந்து இயங்கத் தூண்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
