நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஜூலை 6- நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாபில் தலா 4 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும். குஜராத், கருநாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 2 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அரியானா, ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கல்லூரி மூடப்பட்டுள்ளது.

இந்த 58 நிறுவனங்களில், 3 கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ளவை அனைத்தும் தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகும். மேலும், இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 950-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரேடியோ மேற்பார்வையாளர் பணியிடம்
நேரடி நியமன முறையில் நிரப்பப்படும்

சென்னை, ஜூலை 6- பொதுப்பணித் துறையில் ரேடியோ மேற்பார்வையாளர் என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் தற்போது புதிதாக ரேடியோ மேற்பார்வை யாளர் (Radio Supervisor) என்ற புதிய பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

நேரடி நியமன முறையில் நிரப்பப்படும் இந்த பதவிக்கு கல்வித் தகுதியாக, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் டிப்ளமா படிப்பு (டிசிஇ) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசாணையை பொதுப்பணித் துறையின் செயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

பொதுப்பணித் துறையில் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள ரேடியோ மேற்பார்வையாளர் பதவிக்கு பொறியியல் டிப்ளமா படிப்பு கல்வித் தகுதியாக இருப்பதால் இப்பதவியானது டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (டிப்ளமா மற்றும் அய்டிஅய் கல்வித்தகுதி பதவிகள்) வாயிலாக நிரப்பப்படும்.

டிஎன்பிஎஸ்சி-யின் 2026 தேர்வுக் கால அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் அய்டிஅய் கல்வித்தகுதி) அறிவிப்பு ஜூலை 7ஆம் தேதி (செவ்வாய்) வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு செப். 20ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பில் பொதுப்பணித் துறை ரேடியோ மேற்பார்வையாளர் பணியிடம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *