பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணனின் நினைவு போற்றும் நிகழ்வு

3 Min Read

சென்னை, ஜூலை 6– பொம் மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணனின் நினைவு போற்றும் நிகழ்வு பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் 05.07.2026 காலை 10.30 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக மு.கலைவாணனின் படத்தை தமிழர் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.

கலைவாணனின் தாயார் மரகதம் அம்மையாரும் வாழ்விணையர் தமயந்தியும் ஆசிரியரின் அறிவுறுத் தலின்படி மேடையில் அமர வைக்கப் பட்டனர். நிகழ்வீன் தொடக்கத்தில் கலைவாணனின் கலைப் பயணத்தை எடுத்துச் சொல்லும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு,  மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிஃபேன், தீபம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் அண்ணாமலை பாண்டியன், துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, ஆகியோர் நினை வேந்தல் உரை ஆற்றினர்.

முதலில் உரையாற்றிய ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பெரியாரின் திராவிட இயக்கக் கருத்துகளை பொதுமக்களிடம் கலை வடிவில் கொண்டு சேர்த்ததில் கலைவாணரின் பங்கு மிகப்பெரியது எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, உடல்நலக் குறைவு காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்தபோதிலும், இது கொள்கைக் குடும்பத்தின் நிகழ்ச்சி என்பதாலேயே தவறாமல் பங்கேற்றதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய கனிமொழி எம்.பி., சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட முற்போக்குக் கருத்து களை எந்த சமரசமும் இன்றி தனது பொம்மலாட்டக் கலை மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர் கலைவாணர் என்றும், அவர் விட்டுச் சென்ற கலை மரபை அவரது குடும்பத்தினர் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்; அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கு வோம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இடையே கலைவாணன் அவர்களின் வாழ்க்கைப் பயணம், கலைப் பணிகள் மற்றும் கொள்கைப் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அக்குறும்படம் அரங்கில் கூடியிருந்த அனைவரையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

தொடர்ந்து உரையாற்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், கலைத்துறையில் கொள்கையை நிலைநாட்டிய கலைவாணனின் மறைவு கலை உலகிற்கும் திராவிட இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அனைவரும் ஆண்டுக்கு இருமுறை அல்லது குறைந்தது ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரையில், இளமைப் பருவத்திலேயே கலைவாணனுக்கு கலையின் மீது இருந்த ஆர்வத் தையும், அந்த ஆர்வத்திற்குத் தடையேதும் சொல்லாமல் ஊக்குவித்து ஒத்துழைத்த அவரது தந்தையார் கலைமாமணி முத்துக் கூத்தனின் பண்பையும் நயம்பட எடுத்துரைத்தார்.

தன்னுடைய குமரனின் திறமைக்கு துணையாக நின்றதோடு, பொம்மலாட்டத்தில் மகனையே குருவாக ஏற்றுக்கொண்டதை “குமரகுரு” என்று நயத்துடன் விளக்கி, தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பதன் எடுத்துக் காட்டாய் முத்துக்கூத்தன் குடும்பம் விளங்குவதை அடையாளம் காட்டினார். இந்த பொம்மலாட்ட கலையை பகுத்தறிவுப் பாதை மாறாமல் தொடர்ந்து எடுத்து செல்ல உறுதி பூண்டிருக்கும் கலைவாணனின் மகன்கள் முத்தரசன், பகலவன், குடும்பத்தினர் அனைவரையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் முத்துக் கூத்தன்,  கலைவாணன் இருவரும் இல்லாமல் முதன்முதலாக  பொம்மலாட்ட நிகழ்ச்சியை கலைவாணனின் வாரிசுகள் நடத்தி காட்டினார்கள்.

உணர்ச்சி வெள்ளத்தில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த உறவுகளும், நட்புகளும் நிகழ்ச்சி முடிந்து பொம்மலாட்ட அரங்கி லிருந்து முத்துக்கூத்தன் வருவாரா? கலைவாணன் வருவாரா? என்பதுபோல் கண்ணீருடன் உட் கார்ந்திருந்தனர்.

வெளியே வந்த பகலவன் தன்னுடைய ஏற்புரையில், கலைவாணன் மறையவில்லை, அவர்  உணர்வுபூர்வமாக எங் களை வழி நடத்துவார், அவர் வழியில் நாங்கள் தொடர்வோம்” என்று முடித்தார்.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும்  தேவ.நர்மதா வரவேற்றார். நிறைவில் இறைவி நன்றி கூறினார்.

துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.  மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர் கள், வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட தோழர்கள், பல்வேறு தொண்டு நிறுவனத் தோழர்கள், கலைவாணனிடம் பயிற்சி பெற்றவர்கள், நண்பர்கள், இன உணர்வாளர்கள்,  கலைவாணனின் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு பிற்பகல் உணவுடன் நிறைவு பெற்றது.

நன்கொடை

நிகழ்வை முன்னெடுத்து நடத்திய திராவிடர் கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்த கலைவாணன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ25000/ நன்கொடையாக வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *