மோசமான குற்றங்களில் சிக்கும் அமைச்சர்களைப் பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம் காங்கிரஸ் அறிவிப்பு

1 Min Read

புதுடில்லி, ஜூலை6-  பிரதமர், மாநில முதல மைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை ஒன்றிய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய் தது.

இது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் எதிரிகளைத் தொந்தரவு செய்யும் மசோதா என கூறி இதற்கு எதிர்க்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இது நாடா ளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப் பப்பட்டது. இந்தக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பாஜக வினர். இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக, மோசமான குற்றங்களில் சிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கும் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் மீதான குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராக கரு தப்படுகிறார்.

மோடி ஆட்சியில் விசாரணை அமைப்பு கள் எவ்வாறு செயல்படு கின்றன என்பது அனை வருக்கும் தெரியும். இதை நாங்கள் எதிர்ப்போம். நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தில் ஏற்கெனவே தோல்வி யடைந்த தொகுதி மறு வரையறை மசோதாவை குளிர்கால கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கலாம். அதையும் நாங்கள் எதிர்ப்போம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *