ஏஅய் மூலம் போலி தீர்ப்புகளைச் சகித்துக் கொள்ள முடியாது! உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடில்லி, ஜூலை 5- ஏ.அய் மூலம் வழங்கப்படும் போலியான தீர்ப்புகளை சகித்துக்கொள்ள முடியாது என்று கடும் வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ரூ.87 கோடி கடன் வழக்கில் வழங்கிய தீர்ப்பு செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.அய் மூலமாக வழங்கப்பட்டது.

இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகிய அமர்வில் 3.7.2026 அன்று விசாரணைக்கு வந்தபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ‘‘சட்ட ரீதியாக தீர்ப் பளிக்கும் நடைமுறைகளில் ஏ.அய் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.

இது ஆபத்தான போக்கு ஆகும். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான தீர்ப்புகளை கண்டிப்பாக சகித்துக்கொள்ள முடியாது.

ஏ.அய்யை மட்டுமே சார்ந்து செயல்படும் நிலைக்கு நம்மை தள்ளிவிடும் ஆபத்து உள்ளது’’ எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், நீதிமன்றங்களில் ஏ.அய் பயன் படுத்தும் விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *