அறிவியலை மறந்த பக்தி மங்களூரு அருகே நடைபாலம் இடிந்து விழுந்து 8 பேர் படுகாயம் – சாமி சிலையும் சேதம்!

2 Min Read

மங்களூரு, ஏப்.26 மங்களூரு அருகே புச்செமொகரு பவடபைலு பகுதியில் நடந்த கோயில் திருவிழா வின் போது, பழமையான நடை பாலம் ஒன்று பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர். ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சாமி சிலையும் இதில் சேதமடைந்தது.

புச்செமொகரு பவடபைலு பகுதியில் இருந்து சாமி சிலையை பல்லக்கில் வைத்து தகோடு பர்கே பகுதிக்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். வழியில் இருந்த ஒரு குறுகிய மற்றும் பழமையான நடைபாலத்தை ஊர்வலம் கடந்தபோது, பல்லக்கை சுமந்து வந்தவர்களுடன் பாலம் திடீரென சரிந்து கீழே இருந்த கால்வாய்க்குள் விழுந்தது.

இந்த விபத்தில் பல்லக்கை சுமந்து வந்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு காலில் கல் தூண் விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்குப் பின்னால்
உள்ள அறிவியல்

பாலங்களில் ஒரு குழுவாக அல்லது ஊர்வலமாகச் செல்லும் போது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அறிவியல் காரணி ‘அதிர்வலைகள்’  ஒரே சீரான நடை: பாலத்தின் மீது பலர் ஒரே சீரான வேகத்தில் அல்லது தாளத்திற்கு ஏற்ப (மேளதாளங்கள் போல) நடக்கும்போது, பாலம் இயற்கையாகவே கொண்டிருக்கும் அதிர்வெண்ணுடன் (Natural Frequency), மக்களின் நடை தரும் அதிர்வெண் ஒத்துப்போகும்.  இது பாலத்தின் ஊசலாட்டத்தை அல்லது அதிர்வை பலமடங்கு அதிகரிக்கும். இதன் விளைவாக, பாலம் தன் தாங்கும் திறனை இழந்து நொடிப்பொழுதில் இடிந்து விழும்.

பழைய பாலங்கள்

ஏற்ெகனவே சிதிலமடைந்த அல்லது பழைய பாலங்களில் இத்தகைய அதிர்வுகள் ஏற்படும் போது, விபத்து தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது.

இனிவரும் காலங்களில் இது போன்ற ஊர்வலங்களின் போதும் அல்லது பாலங்களைக் கடக்கும் போதும் மக்கள் கலைந்து செல்வது அவசியம். இயற்பியல் விதிகள் (Laws of Physics) அனைவருக்கும் பொதுவானவை. கடவுள் சக்திக்கு முன்பு இயற்பியல் விதிகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதை புரிந்து கொண்டு அறிவியலை மதிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *