நிதிப்பற்றாக்குறை 12 மடங்கு அதிகரிப்பு! ஒன்றிய அரசின் வருவாய் சரிந்ததாகப் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி

புதுடில்லி, ஜூலை 2 ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் 12 மடங்கு உயர்ந்து ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகப் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி (CGA) ஜூன் 30 அன்று வெளியிட்ட தரவுகளின்படி, அரசாங்கத்தின் இந்த ரூ. 1.62 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையானது, மொத்த பட்ஜெட் மதிப்பீடான ரூ. 16.96 லட்சம் கோடியில் 9.6 சதவீதமாகும்.

கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில், நிதிப் பற்றாக்குறை மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் வெறும் 0.8 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது பற்றாக் குறை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் ரூ. 7.08 லட்சம் கோடியாக இருந்தது. அது 2026 ஏப்ரல்-மே மாதங்களில் ரூ. 6.99 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் ஆகிய இரண்டுமே கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் சரிந்துள்ளது. மொத்த வருவாய் 2 சதவீதம் சரிந்து ரூ. 7.19 லட்சம் கோடியாக உள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஆகும்.

அதாவது இந்திய அரசின் மூலதன வருவாய், பிற வருவாய் வரவுகள் ஆகிய இரண்டுமே குறைந்துள்ளதைத் தரவுகள் காட்டுகின்றன. இந்தச் சூழலில் ஆண்டிற்கான மூலதன வரவுகளின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 16.4 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 16.2 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. வருவாய் வரவுகள் அதைவிட மிக அதிகமாகச் சரிந்துள்ளன. அதாவது ரூ. 34.2 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 33.4 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *