அயோத்தி ராமன் கோயில் ஊழல் ஒவ்வொரு நாளும் அம்பலம் கும்பமேளா சமயத்தில் ராமன் கோயில் காணிக்கையில் பெரும்பகுதி கொள்ளை குற்றவாளிகள் சிக்கினர்

அயோத்தி, ஜூலை 2-  ராமன் கோயில் காணிக்கை திருட்டு குற்றச்சாட்டை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் லவ்குஷ் மிஸ்ரா மற்றும் அனுகல்ப் மிஸ்ரா ஆகியோர் மைத்துனர்கள். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து காணிக்கையில் அதிகளவிலான பணத்தை திருடி பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். சாதாரண ஊழியர்களாக இருந்தவர்கள் திடீரென புதிய வாகனங்கள் வாங்கினர். இவர்களின் பண பரிமாற்றங்கள் மற்றும் சொத்துகளை ஆய்வு செய்ய வருமானவரித் துறையின் உதவியை அயோத்தி காவல்துறையினர் நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு கும்பமேளா நடைபெற்ற போது, ராமர் கோயிலுக்கு அதிகளவில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் வந்ததாகவும், அப்போது கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உதவியுடன் அதிக பணத்தை எடுத்ததாக கூறியுள்ளனர். கோயில் காணிக்கையை எண்ணும் பணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளனர்.

ராமன் கோயிலின் 4 உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கையை 14 பேர் கொண்ட குழுவினர் எண்ணியுள்ளனர். இவர்களில் 11 பேர் வங்கி ஊழியர்கள், 3 பேர் ராமன் கோயில் அறக்கட்டளை ஊழியர்கள்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் அவினாஷ் சுக்லா என்பவர், தான் திருடிய பணத்தை கவுசல்புரியில் தனது சகோதரர் அபிஷேக் என்பவருக்கு சொந்தமான யோகா மய்யத்தில் வைத்துள்ளார். அங்கு காவல்துறையினர் சோதனை நடத்தி 4 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.89 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ராமன் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் கார் ஓட்டுநர் டினு வீட்டில் நடந்த சோதனையிலும் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

15 நாள்கள் கால நீட்டிப்பு

ராமன் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கை முறைகேடு குறித்த விசாரணை விரிவடைவதால் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உ.பி. அரசு 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *