சென்னையில் ‘பைக்’ சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை! காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!

சென்னை, ஜூலை 1- முக்கிய சாலைகளில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை இயக்கி ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கிறது.

இந்த சாகசங்களை காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில இளைஞர்கள், காவல் துறையின் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த இரும்புத் தடுப்புகளை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்றனர்.

அப்போது, தடுப்புகள் சாலையில் உரசியதால் தீப்பொறிகள் பறந்தன. மற்றொரு இளைஞர், பைக்கின் முன் பக்க வீலை மேலே தூக்கி ஆபத்தான முறையில் அதிவேகமாக செல்கிறார்.

இன்னொருவர் இங்கும், அங்குமாக வளைந்து, வளைந்து செல்கிறார். இப்படி, 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித் தனியாகவும், இருவராக சேர்ந்தும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை அவர்கள் காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இது வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வைரலான காட்சிப் பதிவைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து பைக்சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

 

மணவிலக்கு வழக்கில்

கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் வாழ்வூதியம் அவசியமில்லை!

கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு. ஜூலை 1- கணவனை விட மனைவி அதிகம் ஊதியம் வாங்கினால் அவருக்கு கணவன் வாழ்வூதியம் வழங்கத் தேவையில்லை என்று கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் 2024இல் திருமணம் செய்து கொண்ட இணையர் சில மாதங்களுக்குள் பிரிந்துவிட்டனர். கணவரின் மாத ஊதியம் 60,646 ஆகவும், மனைவியின் மாத ஊதியம் 1 லட்சமாகவும் இருந்தது. இருப்பினும், மனைவி வாழ்வூதியம் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணையை நடத்திய விசாரணை நீதிமன்றம், மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் வாழ்வூதியம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி சில்லக்கூர் சுமலதா, ‘கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிக்கு கணவன் வாழ்வூதியம் வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார். மனைவி 1 லட்சம் ரூபாய் ஊதியத்தில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளலாம். மேலும் மனைவிக்கு குழந்தைகள் அல்லது வேறு கடமைகள் இல்லாததைக் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *