விவசாயம் – சிறு தொழில்கள் – கல்விக்காக வழங்கப்படும் இந்தியன் வங்கியின் நிதிச் சேவைகள் அதிகரிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 12– விவசாயம் – சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்களுக்காக இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச் சேவைகள் அதிகரித்துள்ளன என இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார்.

2026-2027ஆம் நிதி ஆண்டின் இந்தியன் வங்கியின் 2026 ஜூன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகளை 10.7.2026 அன்று இவ்வங்கியின் மேலாண் இயக்குநர் பினோத் குமார் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:

இவ்வங்கியின் நிகர இலாபம் 2025இல் பதிவான ரூ.2,973 கோடியிலிருந்து ஜூன் 2026இல் ரூ.3,273 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10.09 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்காக விவசாயம் மற்றும் சிறு – குறு – நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2025இல் ரூ.3,63,221 கோடி என்ற அளவிலிருந்து ஜூன் 2026இல் ரூ.4,16,992 கோடியாக உயர்ந்து 14.80 சதவீதம் வளர்ச்சியை ஈட்டியிருக்கிறது.

அதேபோன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விக்கான கல்விக் கடன்கள் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் சிறு – குறு  தொழில்கள் ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 18.74 சதவீதம், 9.96 சதவீதம் மற்றும் 17.03 சதவீதம் என அதிகரித்திருக்கின்றன.

வாடிக்கையாளர்களின் அனைத்து வகையான வங்கித் தேவைகளையும் நிறைவு செய்வதன் மூலம், அவர்களின் முதன்மையான நிதிப் பங்காளராக உருவெடுப்பதே எங்களின் நோக்கமாகும்.

புதுமையான உத்திகளுக்கும், வாடிக்கையாளர்களை மய்யமாகக் கொண்ட அணுகுமுறையே இந்தியன் வங்கியின் அடித்தளமாக விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *