ஜப்பான் பிரதமர் இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஆலோசனை

2 Min Read

புதுடில்லி ஜூலை 1- ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் 3ஆம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், குறைகடத்திகளுக்கான உறுதியான பகிர்மானச் சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய விசயங்கள் அவருடைய இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.

புதுடில்லியில் நாளை நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த உச்சிமாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிடுவார்கள். இந்த சந்திப்பின்போது இரு தரப்பிலும் 10 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டு பொருளாதார மன்றத்திலும் தகாய்ச்சி கலந்து கொள்ள உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத திறன்பேசி (ஸ்மார்ட் போன்) பயனர்களேயில்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் நிறுவனம் சந்தையில் போட்டியை சமாளிக்கவும் பயனர்களை தக்க வைக்கவும் அவ்வப்போது புதிய பயன்பாட்டுச் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பயனர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில், இனி கைப்பேசி எண் இல்லாமல் பயனர்களை வைத்தே பயன்படுத்தலாம். பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது. இந்த வாரத்தில் இருந்தே பயனர்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் Settings > Account > Username வழியாக பெயரை ரிசர்வ் செய்யலாம். இந்த புதிய அம்சம் அறிமுகமான பிறகு, பயனர் பயனர்பெயர் (Username) வசதியை பயனர் பயன்படுத்தியிருந்தால், முதல் முறையாக யாராவது செய்தி அனுப்பும்போது பயனரின் தொலைபேசி எண் மற்றவர்களுக்கு தெரியாது. பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் கொண்டு வரவுள்ள புதிய அம்சமாக இது கருதப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *