அருணாச்சலப் பிரதேசத்தில் ‘திடீர்’ வெள்ளம், நிலச்சரிவு – பல கிராமங்கள் துண்டிப்பு 3 ஆயிரம் மக்கள் பரிதவிப்பு

2 Min Read

இட்டாநகர், ஜூலை 1- அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற் றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு கிராமங்கள் துண் டிக்கப்பட்டன. இதில்  3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு

அருணாச்சலப் பிரதேசத் தின் லோயர் சியாங் மாவட் டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள நெல் வயல்கள், வீடுகள் உள்ளிட்ட தனியார் சொத்துக்கள், பாலங்கள், சாலைகள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள் ளதாக மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆகஸ்டி ஜமோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “லோயர் சியாங் மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டபிர்போ சாகு, லோக்லு, ரோட்டே, ராமே, கோயு உள்ளிட்ட கிராமங்களில் சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இதுவரை உயிரி ழப்போ, காயங்களோ இதுவரை பதிவாகவில்லை. ராணுவம், இந்தோ – திபெத் எல்லை, காவல் எல்லை, இந்திய ராணு வத்தின் எல்லை சாலை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட நிர்வா கம் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளது. சாலைத் தொடர்பை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ரோட்டே கிராமத்தைச் சேர்ந்தவரும், குருங் குமே மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான டேவிட் கோயு, “இங்கு பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால், உள்ளூர் மக்கள் வாழ் வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். நெல் வயல்கள், தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வளர்ப்புப் பிராணிகளான ஆடுகள், மாடுகள், பன்றிகள், கோழிகள் உள்ளிட்ட கால் நடைகளையும், வளர்ப்புப் பறவைகளையும் மக்கள் இழந்துள்ளனர். கிராம மக்கள் பலரும் வெளியே செல்ல முடி யாமல் சிக்கி உள்ளனர். இந்த கடுமையான சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து நாசமாகின.

கிராமத்தின் தொங்கு பாலம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அணுகு சாலைகள், சிறு பாலங்கள் கடுமையாக சேத மடைந்துள்ளன. ரோட்டே கிராமம் வெளியுலகத் தொடர்பின்றி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் குடிநீர் விநியோக அமைப்பு முற்றிலுமாக பாதிக் கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மின் இணைப்புகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சாலைத் தொடர்பை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும், தற்காலிக பாலம் அமைக்க வேண்டும், உணவு தானியங்கள் வழங்க வேண்டும், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை சீரமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளூர் மக்களும் மாணவர்களும் அரசிடம் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள் ளும் வகையில் சேதங்கள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *