சென்னையில் 600 முக்கியச் சாலை சந்திப்புகளில் சாலை வளைவுகளைச் சீரமைக்கும் பணி விபத்துகளைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை!

1 Min Read

சென்னை, ஜூன் 30– மாநகராட்சிக்கு உட்பட்ட 600 முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் விபத்துகளின்றி சீரான போக்குவரத்துக்காக இந்த சந்திப்புகளில் உள்ள சாலை வளைவுகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகளும், 5,653.89 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நெரிசல் குறையும்

மாநகராட்சி சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி பேருந்து தடச் சாலைகளை இணை கின்றன.

இவ்வாறு இணையும் சாலை சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்தை எளிதாகும் வகையில் மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

முதல்கட்டமாக
94 சாலைகள்

அதன்படி, இந்த சாலை சந்திப்புகளை போக்கு வரத்து மேலாண்மை வழி காட்டுதலின்படி திருத்தியமைப்பதன் மூலம் சந்திப்புகளில் அமைந்துள்ள வளைவு களில் வாகனங்கள் எளி தாகவும் வேகமாகவும் செல்ல இயலும்.

இதனால் போக்கு வரத்து நெரிசல் குறைவ தோடு ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தடுக்க இயலும்.

மேலும் பாதசாரிகள் அச்சமின்றி பாதுகாப்பாக நடப்பதற்கும் வழிவகை யாக உள்ளது.

முதற்கட்டமாக முக்கிய பிரதான சாலை சந்திப்பு வளைவுகளில், 94 சாலை சந்திப்பு வளைவுகளை மேம்படுத்துவதற்கு ரூ.3 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் டெய்லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை, வாசு தெரு, அழகப்பா சாலை, டாக்டர் நாயர் சாலை, எம்.கே.பி. நகர் சாலை சந்திப்பு மற்றும் வேப்பேரி சாலை ஈ.வி.கே. சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இப்பணிகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, 600 சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தும் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *