பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “DARE 2026” மாரத்தான் – போதைப் பொருள் விழிப்புணர்வு ஒட்டம்

3 Min Read

வல்லம், ஜூன் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “DARE 2026” (Drug Awareness Run for Everyone) என்ற மாரத்தான் போட்டி 28.06.2026 அன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி), எஸ்.காயத்திரி (வல்லம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்), டி.செந்தில்குமார் (மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் தஞ்சாவூர்), கர்னல் கபில்துலி (கட்டளை அதிகாரி 34 தமிழ்நாடு சுயேச்சை கம்பெனி. தேசிய மாணவர் படை தஞ்சாவூர்), விங் கமாண்டர் கே.சுபாஷ் (கட்டளை அதிகாரி, 3 தமிழ்நாடு விமானப்படை தொழில்நுட்ப பிரிவு, தேசிய மாணவர் படை), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணைமேயர், தஞ்சாவூர் மாநகராட்சி) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., 2 கி.மீ., என நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்துகொண்டனர். மொத்தம் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு மட்டுமன்றி மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

21 கி.மீ.பிரிவு – வெற்றியாளர்கள்

முதல் பரிசு – ஆர்.அமித்பட்டேல், கர்நாடகா – பரிசு தொகை ரூபாய் 25000/-

இரண்டாம் பரிசு – எம்.சத்தீஸ்குமார், கோயம்புத்தூர் – பரிசு தொகை ரூபாய் 20,000/-

மூன்றாம் பரிவு – டி.ஹரீஸ், கோயம்புத்தூர்- பரிசு தொகை ரூபாய் 15,000/-

அடுத்து 7 நபருக்கு ரூபாய் 1,000 வீதம் சிறப்பு பரிசு

10 கி.மீ.பிரிவு – வெற்றியாளர்கள்

ஆண்கள்

முதல் பரிசு – ஜெ.பிரவின், ஜம்மு – பரிசு தொகை ரூபாய் 20,000/-

இரண்டாம் பரிசு – பி.குணசேகர் – பரிசு தொகை ரூபாய் 15,000/-

மூன்றாம் பரிவு – யோகேஷ்ராம், கரூர் – பரிசு தொகை ரூபாய் 12,000/-

அடுத்து 7 நபருக்கு ரூபாய் 1,000 வீதம் சிறப்புப் பரிசு

குடும்பத்தார் 5 கி.மீ.பிரிவு – வெற்றியாளர்கள்

ஆண்கள்

முதல் பரிசு – கே.ஆர்.கண்ணன், ஈரோடு – பரிசு தொகை ரூபாய் 5000/-

இரண்டாம் பரிசு – ஏ.ஆர்.ராபின், தஞ்சாவூர் – பரிசு தொகை ரூபாய் 3000/-

மூன்றாம் பரிவு – எஸ்.ராகேஷ், தஞ்சாவூர் – பரிசு தொகை ரூபாய் 2000/-

பெண்கள்

முதல் பரிசு – வி.கவிதா, திருச்சி – பரிசு தொகை ரூபாய் 15000/-

இரண்டாம் பரிசு – சிவானி, மஹாராஷ்டிரா – பரிசு தொகை ரூபாய் 12000/-

மூன்றாம் பரிவு – ஜின்சி, கேரளா – பரிசு தொகை ரூபாய் 10000/-

அடுத்து 7 நபருக்கு ரூபாய் 1000 வீதம் சிறப்புப் பரிசு

சிறுவர்கள் 2 கி.மீ.பிரிவு – வெற்றியாளர்கள்

முதல் பரிசு – எ.திவாஷ்சினி – பரிசு தொகை ரூபாய் 5000/-

இரண்டாம் பரிசு – வி.ஷாம்விஜய்  – பரிசு தொகை ரூபாய் 3000/-

மூன்றாம் பரிவு – ஏ.எம்.மெலிரான் – பரிசு தொகை ரூபாய் 2000/-

அடுத்து 7 நபருக்கு ரூபாய் 1000 வீதம் சிறப்புப் பரிசு

மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேரா. ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, ஆகியோர் முன்னிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் வி.வெங்கடசுப்பிரமணியன், டாக்டர் எஸ்.கவுரிசங்கர் (எம்.பி.எஸ், ஆலோசகர் மற்றும் சிறுநீரக மருத்துவம், மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர்), எஸ்.மணிவாசகம் (மக்கள் தொடர்பு அலுவலர், மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்), ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.

பங்கேற்றோர்

இதனைத் தொடர்ந்துஆம்.எம்.பாஸ்கரன் (எ.டு.இசட் மேலாண்மை இயக்குநர்), திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திரு.செந்தமிழ்செல்வன் (சிவராமன் & கோ. எச்.பி. பெட்ரோலியம், தஞ்சாவூர்), ஆர்.வி.பி.சத்தீஸ்குமார் (பெட்ரோல் பங்க், பிள்ளையார்பட்டி), எ.சாக்ரடீஸ் (கலை ஸ்டீல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ், தஞ்சாவூர்), கார்பனேற்றப்பட்ட நீர் தயாரிப்பு நிலையம் நிர்வாக இயக்குநர் எஸ்.விக்னேஷ்குமார், (கோல்டுகப்), பிள்ளையார்பட்டி, உரிமையாளர் பி.பட்டாபி, தீபு விளையாட்டு, தஞ்சாவூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் மாரத்தான் போட் டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல் கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் பேரா. டி.ரமேஷ் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *