இராசபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – திறந்தவெளி மாநாடு’’ கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு

4 Min Read

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட
கலந்துறவாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது

குற்றாலம், ஜூன் 28 ஆயிரம் இளைஞர்கள்அறப்போராட்ட களவீரர்கள் பட்டியலை  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, விருதுகர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்  தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.

27.6.2026அன்று மாலை 6 மணிக்கு குற்றாலம் வீகேயென்மாளிகையில்  கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம்  தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்  உற்சாகமாக நடைபெற்றது. தென்காசி மாவட்ட கழக துணைச்செயலாளர் அ.சவுரந்திரபாண்டியன் கடவுள் மறுப்பு கூறலுடன் இக்கூட்டம் தொடங்கியது.

திராவிடர் கழகம்

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வரவேற்புரையாற்றினார்.

10வயதில் மேடையில்பேசத்தொடங்கி  83 ஆண்டுகாலமாக  தந்தை பெரியார் கொள்கையினை உலகமயமாக்க உழைத்து வரும் தமிழர்தலைவருக்கு வாழ்த்துக் கூறி மாவட்ட  கழக காப்பாளர்கள் இரா.காசி, சி.வேலாயுதம்,பால்.இராசேந்திரம்,சீ.டேவிட்செல்லத்துரை  ஆகியோர் இணைந்து  பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்  மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, திருநெல்வேலி மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன்,தென்காசி மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன்,மாவட்டச்செயலாளர் கை.சண்முகம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, மாவட்டச் செயலாளர் தி.ஆதவன்,விருதுநகர் நகர தலைவர் கா.நல்லதம்பி,  காப்பாளர்கள் பால்.இராசேந்திரம்,சீ.டேவிட் செல்லத்துரை, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்  ஆகியோர்  செயலாக்கவுரை வழங்கினர்.

திராவிடர் கழகம்

நிறைவாக  தமிழர் தலைவர் ஆகியோர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை அறிவித்து  தந்தைபெரியாரின் தத்துவ வெற்றியினையும், கழகப்பொறுப்பாளர்கள் ஆற்றவேண்டிய களப்பணிகளையும், கடமைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திராவிட மாணவர்கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன்,  மகளிர் பாசறை மாநிலதுணைச்செயலாளர்  பெ.பாக்கியலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும்,தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கோ.முருகன் நன்றி கூறினார்.

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: 20.8.2026 அன்று இராசபாளை யத்தில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் என்ற தலைப்பில் திறந்தவெளி மாநாட்டினைத்  தமிழர்தலைவர் தலைமையில் மிகச்சிறப்பாக  நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது,

தீர்மானம் 2: 4.7.2026 அன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை விளக்கி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3 : 1943 ஆம் ஆண்டு சூன் 23ஆம் நாள் கடலூரில்  நடைபெற்ற மாநாட் டில் 10 வயதில் பேசத் தொடங்கி இன்று 93 வயதிலும் கொள்கை முழக்கம் செய்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் உளங்கனிந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

தமிழர் தலைவர் அறிவித்த புதிய கழகப் பொறுப்பாளர்கள்

திருவில்லிபுத்தூர் நகர திராவிடர் கழகம்

தலைவர் :இரா.பகீரதன்,

செயலாளர் :இரா.கோவிந்தன்

சிவகாசி மாநகர திராவிடர் கழகம்

தலைவர் : மா.முருகன்

செயலாளர் : து.நரசிம்மராஜ்

சிவகாசி மாநகர இளைஞர் அணி

தலைவர் : மணிமாறன்

செயலாளர் : ஜீவாமுனிஸ்வரன்

சாத்தூர் நகரம்

அமைப்பாளர்: மு.அகிலன்

சிவகாசி ஒன்றியம்

தலைவர் : மா.நல்லவன்

செயலாளர்: பெ.கண்ணன்

அருப்புக்கோட்டை நகரம்

தலைவர் : மு.முனியசாமி

செயலாளர் : பா.ராசேந்திரன்

திராவிடர் கழக நகர இளைஞர் அணி  – அருப்புக்கோட்டை

தலைவர் : மு.புகழேந்தி

செயலாளர் : அ.யாழ்திலீபன்

விருதுநகர் மாவட்ட
திராவிடர் கழகம் பொறுப்பாளர்கள்

காப்பாளர் : அ.தங்கச்சாமி

தலைவர் : இல.திருப்பதி

செயலாளர்: விடுதலை தி.ஆதவன்

துணைச் செயலாளர் : வெ.முரளி

துணைத் தலைவர் : கா.நல்லதம்பி

விருதுநகர் நகரத்

தலைவர்: பெ.த. சண்முகசுந்தரம்

பொதுக்குழு உறுப்பினர்:

வெ.புகழேந்தி,  இரா.அழகர்

 

மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி

தலைவர் : ச.சுந்தரமூர்த்தி

செயலாளர் : ப.மனோகரன்

அமைப்பாளர் : க.திருவள்ளுவர்

மாவட்ட மாணவர் அணி

அமைப்பாளர்: அ.பெரியார்செல்வம்

மாவட்ட மகளிர் அணி

தலைவர் : ஆ.சாந்தி

செயலாளர் : பொன்மணிராஜயோகம்

மாவட்ட மகளிர் பாசறை

தலைவர் : தி.ராஜலட்சுமி

செயலாளர் : இரா.உமாமகேசுவரி

இராசபாளையம் நகர திராவிடர் கழகம்

தலைவர் :பூ.சிவக்குமார்

செயலாளர் : இரா.பாண்டிமுருகன்

 

தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி

தலைவர்: அ.பிரசாத்

 

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம்
புதிய அமைப்பு தொடக்கம்

தலைவர் : அ. இலக்கியா (அழகாபுரி)

செயலாளர்: இரா. அன்புச்செழியன் (வாழையடி)

துணைத் தலைவர்: பே.விஸ்வம்  (நடுநாலுமூலைக்கிணறு)

துணைச் செயலானர்: ச.சுபதர்ஷினி (பன்னம்பாறை)

அமைப்பாளர் : அ,மதிவதனி (நடுநாலுமூலைக்கிணறு)

 

மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

தலைவர் : பா.அசோக்

செயலாளர் : கோ.பெத்தையா

அமைப்பாளர் : வழவைமுத்தரசன்

துணைத் தலைவர் : மா.பாரத்

துணைச் செயலாளர் : பூ.பத்மநாதன்

நகர அருப்புக்கோட்டை பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்:  ச.சண்முகநாதன்

திருவில்லிபுத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம்

அமைப்பாளர்: கு.போத்திராஜ்

வத்திராயிருப்பு ஒன்றியம்

தலைவர் : மு.சீனி

செயலாளர் பா.நடராஜன்

காரியாப்பட்டி ஒன்றியம்

அமைப்பாளர்: வீ.ஆதிமூலம்

அருப்புக்கோட்டை ஒன்றியம்

தலைவர் : மா.முத்துக்குமார்

செயலாளர்:  இரா.முத்தையா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *