தி.மு.க. அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்து ஆகாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 31 கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் போட்டி யிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞர் சிவஞான சம்பந்தம் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக அறக்கட்டளைக்கு வாங்கப்பட்ட நிலத்தின் விவரங்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களது மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை என்பது ஒரு தனித்துவமான அமைப்பு ஆகும். எனவே, அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று கூறியது.

தள்ளுபடி

மேலும், அறக்கட்டளை சொத்துக்களை வேட்புமனுவில் குறிப்பிடத் தேவையில்லை என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் சொத்து விவரங் களை மறைக்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், வழக்கைத் தொடர்ந்த சிவஞானசம்பந்தமும் தனது மனுவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *