2031ஆம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் திட்டம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை

1 Min Read

சென்னை, ஜூலை 15– தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் மின்கல மின்னேற்ற (சார்ஜிங்) உள்கட்டமைப்பை அதிரடியாக விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனியாக துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு

மாநிலம் முழுவதும் வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.

கூடுதல் செலவின்றி புதிய வசதி தற்போதுள்ள நடைமுறைகளின்படி, புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க கூடுதல் மின் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.

பேட்டரி சார்ஜிங் வசதி

அரசின் இந்த புதிய முடிவின் மூலம், கூடுதல் மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, மிக குறைந்த முதலீட்டிலேயே இ.பி சார்ஜிங் வசதிகளை எளிதாக அமைத்துவிட முடியும்.

உயர் மட்டக் குழு

மின்சார வாகன சார்ஜிங் உள்கட்ட மைப்பிற்காக மட்டுமே தனியாக புதிய மின் சேவை இணைப்பைப் பெறவும் நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

சார்ஜிங் நிலையங்களை வைப்போருக்கு பெரும் நிம்மதி தரும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கட்டணம் மற்றும் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்களிக்க அல்லது அந்த கட்டணங்களைக் கணிசமாக குறைக்க வேண்டும் என அரசுக்கு உயர் மட்ட குழு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

அரசின் இந்த சலுகைகள் மற்றும் கொள்கை திருத்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *