பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி

1 Min Read

திருச்சி, ஜூன் 28- பன்னாட்டு போதை ஒழிப்பு நாளினை (26.06.2026) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகர காவல், இந்திய செஞ்சிலுவை சங்கம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த குடி போதை மாற்று மறு வாழ்வு மய்யம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து 25.06.2026 அன்று நடத்திய விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேரா. தினேஷ் மற்றும் பேராசிரியர்கள் ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி, கோகிலவாணி, ரெத்தினா, பிரகதி, சேதுராஜா மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறீரங்கம் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தலைவர் கே.சீனி வாசன், திருச்சி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் பொறியாளர் ஜி.ராஜசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்து சிறப்பித்த இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி இரயில் நிலைய சந்திப்பில் நிறைவுற்றது.

இப்பேரணியில் நமது மருந்தியல் கல்லூரி மாணவர்கள் 122 பேர் கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழியினை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *