ஏழைகளுக்கான ஸோகோ நிறுவன சி.எஸ்.ஆர். நிதி நிதி பா.ஜ.க. வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியாக திருப்பப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

1 Min Read

சென்னை, ஜூன் 28 ேஸாஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியை, பா.ஜ.க வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியாக சட்ட விரோதமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, அந்நிறு வனத்தின் தலைமை நிர்வாகி சிறீதர் வேம்பு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:

கல்வி உதவித்தொகை, ஏழைக ளுக்கான மருத்துவச் செலவு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நல வாழ்வு போன்ற மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய ேஸாஹோ நிறுவனத்தின் CSR நிதி, அதன் உண்மையான நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படாமல் அரசியல் ஆதாயங்களுக்காகத் திசை திருப்பப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர்களுக்குப் பகிர்வு

ேஸாஹோ நிறுவனத்தின் கார்ப்பரேட் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த நிதி, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க போட்டியிட்ட வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி உள்பட 27 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியாக சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்

இத்தகைய நிதிப் பரிவர்த்தனைகள் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதால், இது ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123′-இன் கீழ் கடுமையான தேர்தல் ஊழல் (Corrupt Practice) என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *