லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவதையோ, லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையோ, ஒரு கட்சியில் ஜெயித்தவர்கள் திடீரென்று தமது பதவியை ராஜினாமா பண்ணாமல் வேறு கட்சிக்குப் போவதையோ தவறு என்று எந்த அரசியல் கட்சிக்காரர்களோ, அரசாங்கமோ கருதி நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லையே. தயக்கம் காட்டுவது ஏன்? எல்லோரும் அதில் ஈடுபட்டு உள்ளதால் எந்தக் கட்சிக்காரர்களும் அது தப்பு என்று வெட்கப்பட மறுக்கிறார்கள் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
