அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 152 மருத்துவ முதுகலை இடங்கள் விடுவிப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிக்கை!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 26– தமிழ்நாடு அரசு 152 மருத்துவ பட்டமேற்படிப்பு (PG) இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு விடுப்பு செய்யப்பட்டதை எதிர்த்து, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களை (In-Service Doctors) கொண்டு நிரப்ப வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறைக் கால அமர்வில் 24.6.2026  அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் நீதிமன்றத்தில் வாதாடுகையில்: “மருத்துவ பட்டமேற்படிப்பில் இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இரண்டாவது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பணியில் உள்ள மாணவர்கள் (In-Service) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

வழக்குரைஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப் பினார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *