சென்னை, ஜூன் 25- ஜாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக் கத்தை கடைபிடிக்கும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருதை வழங்கி வருகிறது. நடப்பு 2026-2027ஆம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நோக்கம்!
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிராமப்புறங்களில் ஜாதிப் பாகுபாடற்ற, சமத்துவமான சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்கும் ஊராட்சிகளை சிறப்பிப்பது.
பரிசுத் தொகை: ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த 10 சிறந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அதனுடன் ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருதும் வழங்கப்படும்.
இந்த விருது பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 31.07.2026
இணையதளம் வழியாக: விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேரடியாக: மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்குச் சென்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு: கிராமங்களில் ஜாதி நல்லிணக்கத்தை மேம்படுத்திய சிறந்த ஊராட்சிகள் இந்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
