தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு சீனா பதிலடி! கருப்புப் பட்டியலில் ராணுவ நிறுவனங்கள்

2 Min Read

பீஜிங், ஜூன் 25- சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் மீது சீனா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வர்த்தகத் துறை இணைந்து கடந்த மாதம் சீனாவின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. சீனாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா, முன்னணி தேடுபொறி நிறுவனமான பைடு, மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவன மான பிஒய்டி, நியோ உள்ளிட்ட 180 நிறுவனங்களை அமெரிக்கா தனது சீன ராணுவ கூட்டு நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்தது.

இதனால், இந்நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதால், அமெரிக்க ராணு வத்திற்கான எந்தவொரு ஒப்பந்தத் தையும் வழங்க அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு பதிலடியாக சீனாவும் தற்போது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரோன், ஏவுகணைகள், மின்சார வாகனங்கள், விண்வெளி தயாரிப்புகள் செய்வதற்கு தேவையான அரிய வகை கனிமங்களை சீனாவிடமிருந்து வாங்குவதற்கு அமெரிக்காவின் 10 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த நிறுவ னங்களுக்கு சீனாவிடமிருந்து இரட்டை பயன்பாட்டு பொருட்கள் (ராணுவம் மற்றும் ராணுவமல்லாத பயன்பாடுகளை கொண்ட பொருட்கள்) ஏற்றுமதி செய்யப் படாது என அறிவித்துள்ளது.

மேலும், சீன அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரேதியான் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட 46 அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை நேரடியாக வாங்க நிதி அமைச் சகம் தடை விதித்துள்ளது. சீனாவிடமிருந்து வாங்கிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த நிறுவனமோ அல்லது தனிநபரோ தடை விதிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு அவற்றை மறுஏற்றுமதி செய்யக் கூடாது எனவும் கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்

அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட 28 அப்பாச்சி ஹெலிகாப்டர் மற்றும் எம்777ஏ2 ஹோவிட்சர் பீரங்கிகளை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இவைகளுக்கான பராமரிப்புச் சேவை வழங்கும் ரூ.4,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன் மூலம் பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், பழுதுபார்த்தல், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சி ஆகியவையும், ஹெலிகாப்டர்களுக்கான பொறியியல், தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் போர்

சீனாவின் இந்த பதில் நடவடிக்கையால் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. அமெரிக்கா தனது தொழில்நுட்பங்கள் சீனாவுக்கு செல்வதை தடுக்க முயற்சிப்பதும், சீனா தனது அரியவகை கனிமங்கள் அமெரிக்கா செல்வதை தடுக்க முயற்சிப்பது உலக விநியோக சங்கிலியிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *