என்று தீரும் இந்த அவலம்? தொழில்நுட்பக் கோளாறால் இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

போபால், ஜூலை 8 மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமா னம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று (ஜூலை 08) காலை 6.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-7295 விமானம் 51 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, புறப்பட்ட 30 நிமிடங்க ளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, விமானி இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை யிறக்க முடிவு செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் பத்திரமாக காலை 7.15 மணிக்கு விமானம் இந்தூ ரில் தரையிறங்கியது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட உடன் பயணிகள் பீதி அடைந்தனர்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதி யாக, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது. பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணமும் திருப்பித் தரப்பட்டது. இதன் பின்னர், பொறியாளர்கள் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *