தெலங்கானாவில் ‘நீட்’ கொலை வாளுக்கு மாணவி உயிரிழப்பு!

1 Min Read

அய்தராபாத் ஜூன் 22- தெலங்கானாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயதான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மியாபூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஷேக் சனா (வயது 19). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் நேற்று நடைபெற்ற ‘நீட்’ மறுதேர்வு எழுத இருந்தார்.

 தற்கொலை

இந்நிலையில், மாணவி ஷேக் சனா நேற்றுமுன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் மறுதேர்வால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஷேக் சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ஷேக் சனாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என ஷேக் சனா கடிதம் எழுதி வைத்த நிலையில் அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *