பாராட்டத் தக்க செய்தி!  பிறமொழிச் சொற்களுக்குத் தூய தமிழ் வார்த்தைகளை வெளியிட்டது  தமிழ் வளர்ச்சிக் கழகம்

2 Min Read

சென்னை, ஜூன் 22  நாள்தோறும் புழக்கத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

‘சொல் புதிது’ திட்டம்

புதிதாக புழக்கத்துக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் `சொல் புதிது’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் 14-ஆவது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் (20.6.2026) நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் ம.ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேராசிரியர்கள் மு.ராமசாமி, இளங்கோவன், தி.கமலி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.

 புதிய தமிழ்ச் சொற்கள்

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிறமொழிச் சொற் களுக்கான தமிழ் வார்த்தைகள் இறுதி செய்யப்பட்டன. அவை வருமாறு:

உணவு மற்றும் பயணம் சார்ந்தவை:

  1. வெஜிடேரியன் ஹோட்டல் – காய்கறி உணவகம்
  2. நான் வெஜிடேரியன் ஹோட்டல் – மீன்கறி உணவகம்
  3. பைக் ரைடு – உந்துருளிப் பயணம்
  4. பைக் டூர் – உந்துருளி உலா
  5. பைக் டாக்ஸி – வாடகை உந்துருளி

தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம்:

  1. டி லிமிடேஷன் – மறு வரையறை
  2. டிஜிட்டல் ஹப் – மின்னணு இணைய மய்யம்
  3. யுபிஅய் (UPI) – தனித்த பணம் வழங்கிடை முகம்
  4. பெரி அர்பன் – புறநகர்
  5. கம்யூனிட்டி வில்லா பிளாட் – சமூகச் சீர்மனை

அறிவியல் மற்றும் மருத்துவம்:

  1. ப்ரீ பையோட்டிக் – நன்னுயிரூட்டி
  2. ப்ரீ பயோட்டிக் அட்மாஸ்ப்பியர் – உயிர் முன்வளி மண்டலம்
  3. ரிவ்யூ ஆப் ரிலேட்டட் லிட்ரேச்சர் – முன் ஆய்வுப் பார்வை
  4. சென்ஸ் ஆப் செர்னிடி – ஆழ்மன அமைதி

பொழுதுபோக்கு சார்ந்தவை:

  1. ஸ்டேண்ட் அப் காமெடி – தனி நபர் நகைச்சுவை
  2. பிளாக் காமெடி – கருங்கூத்து நகை
  3. ஸ்கெட்ச் காமெடி – சித்திரக் குறுநகை
  4. சர்ரியல் காமெடி – இயல் மிகை நகை
  5. கிரிஞ்ச் காமெடி – கடி நகை
  6. பப் – மயக்க மய்யம்

பிற: 21. ஹேண்ட் பேண்டு – கைப்பட்டை

மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டுகோள்

தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:  “பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் பேசவும் எழுதவும் இந்த புதிய சொற்களை ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *