ஒன்றிய மோடி பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கல்வி காவிமயம்! மாணவர்களின் உயிரைக் ‘காவு கேட்கும்’ ‘நீட்’ தேர்வு!

சென்னை, ஜூன்22 – “கல்வி காவிமயம், மாணவர்களின் உயிரைக் ‘காவு கேட்கும்’ ‘நீட்’ தேர்வு! ஒன்றிய மோடி பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம், தி.மு.க.மாணவர் அணி சார்பில் நாளை (23.6.2026) சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள கலைஞர் பொன்விழா வளைவு அருகில் காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் ஜெ.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

பாசிச பா.ஜ.க. அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப் பட்ட ‘நீட்’ தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடிகள் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருகின்றன.

தி.மு.க. ஆட்சியில் ‘நீட்’ தேர்வில்இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகின்றனர். இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலையாகும்.

இத்தகைய நுழைவுத் தேர்வுகளையும் ‘தகுதி’த் தேர்வுகளையும் இரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசினை தி.மு.கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.

அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசு மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தாய்மொழியைத் துறக்கச் செய்து, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை மக்களிடையே திணித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே, தமிழ்நாட்டில் வடமொழித் திணிப்பை கல்வி நிலையங்களில் பாடத்திட்டம் வழியாகவும் இதர பல்வேறு வகைகளிலும் செய்து வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்!

தற்போது ஒன்றிய அரசுப்பள்ளிகளில் (CBSE) 9–ஆம் வகுப்பி லிருந்து 12 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கற்க வேண்டும் எனும் திட்டத்தைச்செயல்படுத்திட ஒன்றிய மனிதவளமேம்பாட்டுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

மாணவர் அணி சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

எனவே, ஒன்றிய அரசின் இம்முயற்சிகளை தடுத்திட, தி.மு.க. தலைவரின் அறிவுறுத்த லின்படி பா.ஜ.க. அரசின் ‘நீட்’ தேர்வு மற்றும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகை யிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகராம் சென்னை மாநகர், சைதையில் “கலைஞர் பொன்விழா வளைவு” அருகில், நாளை (22.6.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவர் அணி நிர்வாகிகள் அலைகடலெனதிரண்டு பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்க்கொல்லி நீட்தேர்வினை ஒழித்தி டுவோம்!

வடமொழி திணிப்பை தடுத்திடுவோம்!

அண்ணா தந்த இருமொழிக் கொள்கையை போற்றிடுவோம்!

இவ்வாறு ஜெ.வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *