கரூர், ஜூன் 22- கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் 9.6.2026 அன்று மாலை கரூர் தவிட்டுப்பாளையம் பெரியார் மன்றம் அருகில் நடைபெற்றது.
கரூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் தமிழன் தையலகம் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட கழகத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் கழகப் பேச்சாளர் கோவை புலியகுளம் வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழினத்திற்காக செய்த தியாகங்கள் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம், முதன் முதலில் சென்னை மாநகராட்சி கலைஞர் தலைமையில் முதல் வெற்றி பெற்றதற்கு அறிஞர் அண்ணா கணையாழி வழங்கி வாழ்த்திய நிகழ்வு, தமிழ்த் திரையுலகில் பராசக்தி, பூம்புகார், மனோகரா போன்ற திரைப்படங்களில் தமிழ் நல்ல உச்சரிப்பை கொண்டு வந்தவர், பகுத்தறிவு வசனங்களைப் பேச வைத்தவர், பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரம், போன்ற எண்ணத்தை திட்டங் களை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்தார் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் புகலூர் நக ராட்சி தலைவர் சேகர் என் கிற குணசேகரன், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலா ளர் அண்ணா வேலு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அரியநாயகம், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் காளிமுத்து, காப்பாளர் வே ராஜு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் அலெக்ஸ், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், கிருஷ்ணராயபுரம் அமைப்பாளர் வடிவேல், கலை இலக்கிய அணித் தலைவர் ராமசாமி, சமூக ஆர்வலர் விஜயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றி உரை கரூர் நகர தலைவர் ம. சதாசிவம் கூறினார்.
