திருவனந்தபுரம், ஜூன் 20 சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட மேற்கூரையின் நிறம் மாறியதற்குக் காரணம், பக்தர்கள் அதன் மீது நெய் வீசியதுதான் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கூறியுள்ளது.
தங்கத் தகடுகள் திருட்டு
சபரிமலை அய்யப்பன் கோயிலின் மேற்கூரை, பக்கச்சுவர்கள் மற்றும் படிகள் ஆகியவற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், அண்மையில் கோயிலின் துவாரபாலகர் சிலைகள், கதவு மற்றும் நிலை ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத்தகடுகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சபரிமலை கோயிலில் நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது, கோயிலின் தங்க மேற்கூரையில் சில இடங்களில் நிறம் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்ெகனவே தங்கத்தகடுகள் திருடப்பட்டிருந்ததால், இங்கும் ஏதேனும் முறைகேடு அல்லது திருட்டு நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்தது.
இச்சந்தேகத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (17.6.2026) சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் மேற்கூரையில் தீவிரப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், பக்தர்கள் நேர்த்திக்கடனாகவோ அல்லது வழிபாட்டின் போதோ கூரையின் மீது வீசிய நெய் படிந்ததன் காரணமாகவே, அந்த தங்கத்தகடுகள் நிறம் மாறியிருப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, நெய் படிந்து நிறம் மாறியிருந்த மேற்கூரைப் பகுதிகள் அனைத்தும் உடனடியாக இரசாயனங்கள் இன்றி முறைப்படி கழுவி சுத்தம் செய்யப்பட்டன. இதனால் திருட்டுப் பயம் நீங்கி, சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
நெய் என்பது முக்கியமாக ட்ரை கிளிசரைடுகள் எனப்படும் கொழுப்பு அமிலங்களின் கூட்டுப்பொருள் ஆகும். இதில் நீங்கள் குறிப்பிட்டது போல பியூட்ரிக் அமிலம் (Butyric acid), பால்மிட்டிக் அமிலம் (Palmitic acid), ஒலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள் (Organic acids) மிகக் குறைந்த அளவில் (சுதந்திர கொழுப்பு அமிலங்களாக நிறைந்துள்ளன. நெய்யில் உள்ள இந்த வேதிக் கலவைகள் தங்கத்தோடு வினைபுரியாது.
தங்கம் என்பது வேதியியலில் மிகவும் மந்தமான ஒரு உலோகம். இது நெய்யில் உள்ள பியூட்ரிக், பால்மிட்டிக் அல்லது ஒலிக் அமிலம் போன்ற எந்தவொரு பலவீனமான கரிம அமிலங்களுடனும் சாதாரண வெப்பநிலையிலும் சரி, வெப்பப்படுத்தும் போதும் சரி, எந்தவித வேதிவினையையும் ஏற்படுத்தாது. எனவே தங்கம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
அறிவியல் இப்படி கூறுகிறது, ஆனால் தங்கத்தகட்டின் மீது நெய் வீசியதால் அது நிறம் மாறுகிறது என்று விசாரணை அறிக்கை கூறுவது அறிவியலுக்கு ஒவ்வாத கருத்தாக உள்ளது.
